தவறான நடத்தை குற்றச்சாட்டு: ICCயின் தலைமை வழக்கறிஞர் கரீம் கான் பணிநீக்கம்
தவறான நடத்தை குற்றச்சாட்டின் பேரில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை வழக்கறிஞர் கரீம் கானைப் பதவியிலிருந்து நீக்க அந்த நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகள் வாக்களித்துள்ளன.
நீதிமன்றத்தின் நிர்வாகக் குழு பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் 125 உறுப்பு நாடுகளில் 82 நாடுகள் அவருக்கு எதிராக வாக்களித்துள்ளன.
பணிநீக்கம்
இதனைத் தொடர்ந்து கரீம் கான் தனது பதவியை இழந்துள்ளார். நீதிமன்றத்தின் இளநிலை வழக்கறிஞர் ஒருவருடன் தவறான நடத்தை தொடர்பில் ஈடுபட்டதாக கரீம் கான் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால், 56 வயதான பிரித்தானிய வழக்கறிஞரான கரீம் கான் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார். இந்தத் தீர்மானத்தின் சட்டபூர்வ தன்மையை அனைத்து சட்ட வழிகளிலும் எதிர்கொள்ளப் போவதாக கரீம் கானின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

கரீம் கானின் பணிநீக்கத்தைத் தொடர்ந்து, அடுத்த புதிய தலைமை வழக்கறிஞரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைமுறைகள் உடனடியாகத் தொடங்கியுள்ளன. புதிய வழக்கறிஞர் அடுத்த ஆண்டிற்குள் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த பிடியாணைகள் அனைத்தும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். ஏனெனில் நீதிமன்ற நீதிபதிகளுக்கு மட்டுமே பிடியாணைகளைத் திரும்பப் பெறும் அதிகாரம் உள்ளது.
இதனிடையே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைக் கலைக்கத் தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அமெரிக்கா, கரீம் கானின் நீக்கத்தை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளது.
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
நடிகர் ஜிபி முத்து மீது தாக்குதல்.. வீட்டின் முன் மாந்திரீக பூஜை, தட்டி கேட்டதால் தாக்குதல் Cineulagam
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri