செங்கடலில் பயணிக்கும் போர்க்கப்பல்களுக்கு பகிரங்க அறிவிப்பு
செங்கடலில் பயணிக்கும் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய போர்க்கப்பல்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்போவதாக யேமனில் உள்ள ஹவுதி அமைப்பினர் அறிக்கை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யேமனில் உள்ள ஹவுதி அமைப்பினரின் இடங்களை தாக்கும் பங்கேற்கும் அனைத்து போர்க்கப்பல்களும் தங்களது தாக்குதலுக்கு இலக்காகும் என்றும் ஹவுதி அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
உலக சந்தையில் பாதிப்பு
இந்த எச்சரிக்கை காரணமாக செங்கடலில் பயணம் செய்யும் அபாயம் மேலும் அதிகரித்துள்ளதாகவும் அது உலக சந்தையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை காசா பகுதியில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியாக செங்கடலில் இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
