கதிர்காமத்தில் மகிந்தவுக்காக கட்டப்பட்ட வீடு! சிஜடி விசாரணை
கதிர்காமத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்காக கட்டப்பட்டதாக கூறப்படும் வீடு தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை, இன்று(10.03.2025) தன்னிடம் விசாரித்ததாக ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய திஷான் குணசேகர, இந்த வீடு விமலரத்ன என்பவரால் கட்டப்பட்டது என்றும், கதிர்காம கிரிவெஹெர கோயிலின் அப்போதைய தலைமை தேரரால் நிதியளிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
வீட்டைக் கட்டியவர் தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், கதிர்காம கிரிவெஹெர கோயிலின் அப்போதைய தலைமை தேரர் இறந்து விட்டார் என்றும் கூறிய திஷான் குணசேகர, கட்டிடம் தொடர்பான விபரங்களை அறிந்த ஒரே நபர், அவர் மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.
மகிந்த தங்கிய இடங்கள்
இந்த வீடு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமானது அல்ல, மாறாக கதிர்காம கிரிவெஹெர கோயிலின் அப்போதைய தலைமை தேரரால் அவருக்காகக் கட்டப்பட்டது என்றும் திஷான் குணசேகர தெரிவித்துள்ளார்.
போரின் போது, மகிந்த ராஜபக்ச கோயில்களுக்குச் சென்றபோது, அவர் விருந்தகங்களில் தங்கவில்லை, மாறாக வீடுகளிலோ அல்லது கோயில் சொத்துக்களுக்குள் கட்டப்பட்ட சிறிய இணைப்புகளிலேயே தங்கினார் என்றும் ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மகனின் திருமண வரவேற்பில் எடப்பாடிக்கு பிரம்மாண்ட ஏற்பாடு.., எஸ்.பி வேலுமணி போடும் திட்டம் News Lankasri

46 வயதில் கர்ப்பம்: வயிற்றில் குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட சங்கீதா- குவியும் வாழ்த்துக்கள் Manithan

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகர், கொஞ்ச நாள் தான் இருப்பேன்.. விஜய்க்கு வைத்த கோரிக்கை Cineulagam
