அநுர அரசை விரட்டியடிக்க வேண்டும்- நாமல் தான் ஒரேயொரு ஜனாதிபதி! சரத் வீரசேகர
இலங்கையின் பௌத்த சாசனம் மீது விமர்சனக்கணை தொடுக்கும் அநுர அரசை விரட்டியடிக்க வேண்டும். இதற்குரிய நடவடிக்கையை நாம் முன்னெடுக்க வேண்டும் இவ்வாறு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதித் தேர்தல்
"எனது நாட்டில் சாசனம் மற்றும் வளங்களைப் பாதுகாக்க வேண்டுமெனில் ஒற்றையாட்சியைப் பாதுகாக்க வேண்டும்.

ஒற்றையாட்சி பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதத்தை வழங்கி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஒரேயொரு ஜனாதிபதி வேட்பாளர் என்றால் அது நாமல் ராஜபக்சதான். தமக்குரிய வாக்கு குறையும் என தெரிந்தும் அவர் அந்த அறிவிப்பை விடுத்தார்.
அப்படியான ஒருவர் ஜனாதிபதியானால்தான் இந்த நாட்டையும், பௌத்த சாசனத்தையும் பாதுகாக்க முடியும்.
அத்துடன் பௌத்த பிக்குகளுக்குரிய கௌரவமும் மீளக் கிடைக்கப்பெறும் என குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய மிக மோசமான குண்டு வீச்சு... 400 கடந்த பலி எண்ணிக்கை News Lankasri