யாழ். யூடியூபர் கிருஷ்ணா உட்பட நால்வருக்கு விளக்கமறியல்
யூடியூபர் கிருஷ்ணா உட்பட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யூடியூபர் உதவி செய்யும் காணொளிகளை வலையொளி பக்கத்தில் பதிவேற்றி வந்துள்ளார்.
மடக்கி பிடிப்பு
இந்நிலையில், அவர் ஒரு வீட்டிற்கு சென்று அநாகரீகமாக நடந்துகொண்ட காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இவ்வாறான பின்னணியில் அவர் உட்பட நால்வர் நேற்றையதினம் அந்த வீட்டுக்கு மீண்டும் சென்றவேளை ஊர் இளைஞர்கள் அவர்களை மடக்கி பிடித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து, அவர்களுக்கு எதிராக பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கமைய, அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலதிக தகவல் - கஜிந்தன், தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
