ஐக்கிய மக்கள் சக்தி மாநாட்டுக்கு முன்னர் ரணில் - சஜித் சந்திப்பு உறுதி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் விரைவில் சந்திப்பு நடைபெறவுள்ளமை உறுதியாகியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி உதயமாகி எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் ஆறாண்டுகள் ஆகின்றன.
ரணில் - சஜித் நேரில் சந்திப்பு
அதற்கு முன்னதாக இருவரும் நேரடிச் சந்திப்பில் ஈடுபடுவார்கள் எனத் தெரியவருகின்றது.
இதன்போது எட்டப்படும் முடிவுகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் எனவும் அறியமுடிகின்றது.

இரு கட்சிகளும் இணைவுக்கு இணங்கி இருந்தாலும் தனிக்கட்சியா, கூட்டணியா என்பது பற்றி இன்னும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை.
எனவே, ரணிலுக்கு சஜித்துக்கும் இடையிலான சந்திப்பே அடுத்த கட்டத்தை நிர்ணயிக்கும் என கட்சி உறுப்பினர்கள் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan