உடனடி நிதிச் சரிவை சந்திக்கும் அபாயத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை! வெளியாகியுள்ள எச்சரிக்கை
உறுப்பு நாடுகள் தங்களது பங்களிப்புத் தொகையைச் செலுத்தாததால், ஐக்கிய நாடுகள் சபை உடனடி நிதிச் சரிவை சந்திக்கும் அபாயத்தில் இருப்பதாக அதன் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார்.
ஐநாவிற்கு அதிக நிதி வழங்கும் நாடான அமெரிக்கா, தனது பங்களிப்பை நிறுத்தியுள்ளது.
நிதி நெருக்கடி
மேலும் பல நாடுகள் நிலுவைத் தொகையை வழங்காமல் உள்ளன இந்த நிலையில், 2026-ம் ஆண்டின் ஜூலை மாதத்திற்குள், ஐக்கிய நாடுகளின் பணம் தீர்ந்துவிடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதனையடுத்து நிதியைச் சேமிக்க ஜெனீவா மற்றும் நியூயார்க் அலுவலகங்களில் சில தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன: இதன்படி, எஸ்கலேட்டர்கள் மற்றும் குளிரூட்டும் வசதிகள் முடக்கப்பட்டுள்ளன.
புதிய பணியாளர்களை வேலைக்கு எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிதி நெருக்கடியால் ஐநாவின் அமைதி காக்கும் படைகள் (Peacekeeping) மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்கும் திட்டங்கள் பெரிதும் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.
படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விஜய் சேதுபதி Cineulagam
இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு News Lankasri
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri