அநுரவின் அதிரடி நடவடிக்கைகள்! திணறும் அரச உயர் அதிகாரிகள்..
தற்போதை அநுர அரசாங்கத்தின் ஆட்சி நீடிக்குமா? என்ற கேள்வி தற்போது அதிகமாக கேட்கப்படுகின்றது.
ஏப்ரல் மாதத்துடன் ஆட்சி முடிவடைந்து விடும், இவர்களால் ஆட்சியை கொண்டு செல்ல முடியாது என்று எதிர்கட்சிகள் தங்களுடைய குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
பல திணைக்கள தலைவர்கள் தொடர்ச்சியாக பதவி விலகிகொண்டிருக்கின்றார்கள்.நேற்றையதினமும் முக்கிய திணைக்களமொன்றின் தலைவர் பதவி விலகியுள்ளார்.
இந்தநிலையில் சில திணைக்கள தலைவர்கள் தங்களுடைய பாரம்பரியமாக வேறு கட்சியிலிருந்து இந்த கட்சி தங்கள் மீது அழுத்தத்தை கொடுக்கின்றது என்று பதவி விலகி செல்வதை காணக்கூடியதாக உள்ளது என்று கொழும்பு பல்கலைகழகத்தின் பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
என்பிபி கட்சியினர் ஆட்சிக்கு வந்தவுடன் தங்களுடைய ஆதரவாளர்களாக அனைவரையும் மாற்ற வேண்டிய கடமையுள்ளது, அது அவ்வளவு எளிதானது அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்தவிடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி...
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு News Lankasri
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan