இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அதிக வலு மோட்டார் சைக்கிள்கள் சிக்கின!
புத்தளம், தலவில மற்றும் நாவக்காடு பகுதிகளில் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து நடத்திய சோதனையின் போது இந்தியாவில் இருந்து கடல் வழியாகக் கடத்தி வரப்பட்டன எனக் கூறப்படும் 5 உயர்வலு கொண்ட மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தடை செய்யப்பட்ட 800 மற்றும் 400 எஞ்சின் திறன் கொண்ட நான்கு மோட்டார் சைக்கிள்களும், எந்தவொரு சட்ட ஆவணங்களும் இல்லாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்த 250 எஞ்சின் திறன் கொண்ட ஒரு மோட்டார் சைக்கிளும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் விசாரணை
இதன்போது 50, 45 மற்றும் 20, 22 வயதுடைய 4 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோட்டார் சைக்கிள்கள் வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்றும், அவற்றில் சில மோட்டார் சைக்கிள்கள் இரவில் இரகசியமாக ஓட்டிச் செல்லப்பட்டன என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் புத்தளம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam
