யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய முதியவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - கல்வியங்காடு (Jaffna) பகுதியில் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளாகிய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கல்வியங்காடு பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து யாழ் போதனா (Teaching Hospital Jaffna) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (05.04.2024) உயிரழந்துள்ளார்.
பருத்தித்துறை (Point Pedro) வீதி ஊடாக சைக்கிளில் பயணித்த குறித்த நபர் புதிய செம்மணி வீதி வழியாக கடக்க முற்பட்ட நிலையில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
சாரதி அனுமதி பத்திரம்
இதன்போது, சைக்கிளில் பயணித்த நல்லூரை சேர்ந்த க.மோகனகுமார் (வயது 61) என்பவர் படுகாயமடைந்ததோடு, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளர்.

மேலும், சாரதி அனுமதி பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிளினை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய 21 வயது இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.
இதற்கமைய, இளைஞனை எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக கோப்பாய் (Kopay) பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam
பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri