லொறி மீது யானை மோதியதில் ஏற்பட்ட கோர விபத்து! இருவர் பலி - நால்வர் படுகாயம்
மொரகஹகந்த நீர்த்தேக்க வீதியில் இருந்து நாவுல நோக்கி பயணித்த லொறி மீது யானை மோதியதில் வாகனம் கவிழ்ந்து, இருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து மொரகஹகந்த - வடுருமுல்ல பிரதேசத்தில் நேற்று(05) இடம்பெற்றுள்ளது.
மேலதிக சிகிச்சை
இவ்விபத்தில் லொறியின் பின் தளத்தில் பயணித்த சிங்கபுர சூரியவெவ பகுதியைச் சேர்ந்த திலுக நுவன் (வயது 25) மற்றும் நாவல, கணேவத்த நிகடலுபொத்த பகுதியைச் சேர்ந்த தனஞ்சய நவரத்ன ஆகியோரே பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை லொறியில் பயணித்த ஏனையவர்கள் படுகாயமடைந்து அம்பானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள தங்க கழிப்பறை இருக்கை திருட்டு! சந்தேகநபருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri