பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள தங்க கழிப்பறை இருக்கை திருட்டு! சந்தேகநபருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை
இரண்டாம் உலக போரின்போது பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்த வீட்டிலிருந்து தங்க கழிப்பறை இருக்கையை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஜேம்ஸ் ஷிம் தற்போது மற்ற திருட்டுகளுக்காக 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபிட்ச் வேல்ஸ் சிறையில் அடைக்கப்பட்ட, 39 வயதான ஜேம்ஸ் ஷிம், வீடியோ தொழில்நுட்பம் மூலம் ஆக்ஸ்போர்டு கிரவுன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது அவர் செய்த ஏனைய திருட்டுகளுக்காகவும் சேர்த்து 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாதாரண கலை படைப்பு
இந்த தங்க கழிப்பறை இருக்கை சுமார் 6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான மதிப்புள்ள 18 கரட் தங்க கழிப்பறை இருக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தங்க கழிப்பறை இருக்கை 2019 இல் கண்காட்சிக்காக வைக்கப்பட்ட போது பிளென்ஹெய்ம் அரண்மனையிலிருந்து திருடப்பட்டது. இந்த கழிப்பறை இருக்கை ஒரு அசாதாரண கலை படைப்பு. இது இத்தாலிய கலைஞரான மரியோ கேட்டலன் (Maurizio Cattelan)என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
மரியோ கேட்டலன், 'இருநூறு டொலர் செலவழித்து உணவு சாப்பிட்டாலும், இரண்டு டொலர் செலவழித்து உணவு சாப்பிட்டாலும், இறுதி முடிவு ஒன்றுதான்' என்பதை சுட்டிக்காட்டி, தங்க கழிவறையை உருவாக்கியதுடன் அதற்கு 'அமெரிக்கா' என்று பெயரிடப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
