பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்கு அதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்கள்
இலங்கையின் பொதுப் போக்குவரத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் என்பது பொதுவான அனுபவமாக மாற்றப்பட்டுள்ளது.
இது பாதிக்கப்பட்டவர்களை முறைப்பாடளிக்க தயங்கவைக்கும் சூழலையும் உருவாக்கியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
அந்த நிதியத்தின், பாலினத்திற்கான தேசிய திட்ட ஆய்வாளர் பிமாலி அமரசேகர அண்மையில் தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
பொலிஸ் முறைப்பாடுகள்
முறைப்பாடுகள் மிகக் குறைவாகவே வருகின்றன. 2023ஆம் ஆண்டில் சுமார் 300 சம்பவங்கள் மட்டுமே பொலிஸில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் சிலர் இது குறித்து பேசத் தயங்குகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள். சனத்தொகை நிதியம் நடத்திய ஆய்வின் படி, பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் பெண்களில் 90வீதத்துக்கும் அதிகமானோர் துன்புறுத்தலை அனுபவிப்பதாக தெரியவந்துள்ளது.
துன்புறுத்தலில் ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர், ஆனால் அந்த எண்ணிக்கை குறைவாக உள்ளது. பெண்கள் பயணத்திலேயே துன்புறுத்தலை சந்திக்கிறார்கள் என்பதாலேயே, அவர்கள் வேலைக்கு செல்வதிலும் தயக்கம் ஏற்படுகிறது, என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் பொதுப் போக்குவரத்தில் பாலியல் துன்புறுத்தலைக் குறைக்க, பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடளிக்க வேண்டும் என்று பிமாலி அமரசேகர வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





காணாமல் ஆக்கப்பட்டோர் தினமும் தாய்மாரின் கண்ணீரும்....! விடை தான் என்ன 19 மணி நேரம் முன்

நடிகர் பிரபு தேவாவின் பிரம்மாண்ட வீட்டை நீங்கள் பார்த்து இருக்கீங்களா.. புகைப்படங்கள் இதோ Cineulagam

பிரான்சில் அமெரிக்கரை காதலித்து இந்தியாவில் திருமணம் செய்துகொண்ட கேரள இளம்பெண்: ஒரு வைரல் செய்தி News Lankasri
