ஹட்டன் வலயக்கல்வி பிரச்சினை மிக விரைவில் தீர்க்கப்படும்..! நாடாளுமன்ற உறுப்பினர் உறுதி
ஹட்டன் வலக்கல்வி காரியாலயத்திற்கு கடந்த வருடமும் 65 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளோம். இந்த வருடமும் 65 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளது. இந்த அலுவலகம் தொழில் திணைக்கள வளாகத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு தலைவருமான மஞ்சுள சீரவீர தெரிவித்துள்ளார்.
ஹட்டன் கல்வி வலயத்தின் ஊழியர்கள் நேற்று(12.10.2026) நடத்திய கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தினை தொடர்ந்து கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
150இற்கும் அதிகமான பாடசாலைகள்
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ஹட்டன் கல்வி காரியாலயத்தின் பிரச்சினை என்பது இன்று நேற்று தோன்றியதல்ல. இது சுமார் 1990 ஆண்டிலிருந்து இருக்கும் பிரச்சினையாக காணப்படுகிறது. ஸ்ரீபாத வித்தியாலயத்தின் சிறியதொரு இடத்தில் இந்த காரியாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

மழை வந்தாால் இந்த காரியாலயம் நனைகிறது. சுமார் 150இற்கும் அதிகமான பாடசாலைகளை கொண்டு இந்த காரியலயத்தில் 3000இற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியாற்றுகிறார்கள்.
அவர்களின் தேவைகளை இந்த காரியாலயத்தின் ஊடாக நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் இது ஸ்ரீ பாத வித்தியாலயத்தின் வளாகத்தில் அமைந்துள்ளதனால் அங்குள்ள பெற்றோர்களும் பழைய மாணவர்கள் அந்த இடத்தில் அதனை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
நாங்கள் மக்களின் குரலுக்கு செவிசாய்ப்பவர்கள் என்ற வகையில் அதனையும் செவிமடுத்து இப்போது தொழில் அமைச்சு மற்றும் நீதி அமைச்சு ஆகியவற்றுடன் கலந்துரையாடி தொழில் திணைக்கள வளாகத்தில் மூன்று மாடி கட்டிடம் ஒன்றினை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
ஆனால் இதனை உடனடியாக செய்ய முடியாது அதற்கு சில காலம் எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் பணி பகிஸ்கரிப்பு
இது குறித்து நவரெலியா மாவட்ட நாடாளுடன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி கருத்து தெரிவிக்கையில், இன்று வலயக்கல்வி காரியாலயத்தின் ஊழியர்களின் பணி பகிஸ்கரிப்பு நேர்மையானது.

150 பாடசாலைகளையும் 3000 இற்கும் மேற்பட்ட ஆசியர்களையும் வழிநடத்துகின்ற கரியாலயம் தான் ஹட்டன் கல்வி காரியாலயம்.
இந்த கட்டடம் தொடர்பாக நாங்கள் தொடச்சியாக அபிவிருத்தி குழு கூட்டத்தில் பேசி வருகிறோம். இங்குள்ள முக்கிய பிரச்சினைதான் ஹட்டன் பிரதேசத்தில் காணப்படும் காணி பிரச்சினை.
இப்போது நாங்கள் கதை;து ஒரு தீர்மானத்திற்கு வந்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri