ட்ரம்ப் மீதான துப்பாக்கி தாக்குதல்: காசா யுத்தத்தை மையப்படுத்தும் அவுஸ்திரேலியா
காசா யுத்தம் தொடர்பிலான எதிர்ப்பு தாக்குதலே அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி மீது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ்(anthony albanese) கண்டனம் வெளியிட்டுள்ளார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி துப்பாக்கி பிரயோகத்திலிருந்து உயிர்தப்பியமை நிம்மதியளிப்பதாகவும் அவுஸ்திரேலிய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இது மன்னிக்க முடியாத தாக்குதல். ஜனநாயக செயற்பாடுகளில் வன்முறைக்கு இடமில்லை.
காசா யுத்தம்
காசா யுத்தம் தொடர்பில் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களிற்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் அதிகரிப்பதையும் டிரம்ப்மீதான தாக்குதலையும் அமெரிக்கா மிக அவதானத்துடன் கையாள வேண்டும்.
இவ்வாறான சம்பவங்களை எந்த தயக்கமும் இன்றி எதிர்க்க வேண்டும்.
மேலும், நாங்கள் காராசாரமான விவாதத்தின் அளவை குறைக்கவேண்டும். சொல்லாட்சியை அதிகரிப்பதன் மூலம் எந்த பயனும்கிட்டப்போவதில்லை.” என அன்டனி அல்பெனிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
