சிறுமிகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய நடன ஆசிரியர் கைது
சிறுமிகளை தவறான நடத்தைக்கு உட்படுத்தும் வகையில் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் நடன வகுப்பு ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹன்வெல்ல பொலிஸாரால் நேற்று (13.07.2024) குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரணல படேவெல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய திருமணமான நடன வகுப்பு ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த முறைப்பாடுகள்
கைதானவர், தனது நடன வகுப்பிற்கு வந்த சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேகநபர் தொடர்பில் தலங்கம மற்றும் நவகமுவ பொலிஸாருக்கும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஹங்வெல்ல பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam