ரூபாவாலும் டொலர்களாலும் திறைசேரியை நிரப்பியவர் ரணில்! அமைச்சர் புகழாரம்
நாட்டை கொண்டு நடத்த தேவையான நிதி ஏதும் இல்லாத போது அந்த சவாலை ஏற்றுக் கொண்டு, பல்வேறு இக்கட்டான நிலைமைகளுக்கு மத்தியிலும் நாட்டின் திறைசேரியை ரூபாய்களாலும் டொலர்களாலும் நிரப்பியவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ரணிலைத் தவிர வேறு தலைவர் இல்லை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முதல் விஷயம், பணம் நிறைந்த திறைசேரியை வைத்து நாட்டை நடத்துவது போல் அல்ல, டொலர், ரூபாய் இரண்டும் இல்லாத நாட்டை ஆள்வது. எந்த அரசாக இருந்தாலும், இப்படியொரு சவாலை ஏற்க ரணிலைத் தவிர வேறு தலைவர் இல்லை.
இரண்டாவது விஷயம், காலியாக இருந்த திறைசேரியை கையகப்படுத்தி நாட்டை ஆண்டு, திறைசேரியை டொலர்களாலும், ரூ பாயாலும் நிரப்பி, பணவீக்கத்தை 70% இலிருந்து ஒற்றை இலக்கத்துக்குக் கொண்டு வந்தார். இது எளிதான காரியம் அல்ல. அதற்கு சரியான அரசியல் தலைமை தேவை.
ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரப் போர் இன்றும் உயிர்ப்புடன் உள்ளது இரண்டு சந்தர்ப்பங்களிலும் அந்த இரு தலைவர்களுடன் நான் நெருக்கமாகப் பணியாற்றியதால் அது எனக்கு நன்றாகத் தெரியும்.
மக்கள் விரும்பாத முடிவுகளை எடுத்த ரணில்
கடந்த இரண்டு வருடங்களில் மக்கள் பல விரும்பத்தகாத அனுபவங்களை எதிர்கொண்டுள்ளனர். மக்களுக்குப் பிடித்த ஜனரஞ்சகமான முடிவுகளை அவர் எடுத்திருந்தால், நாடு இவ்வளவு வேகமாக தலை தூக்கியிருக்காது.
அவர் விமர்சனங்களை செவிமடுத்து சரியான முடிவுகளை எடுத்தார். இந்த சாதனைகள் அனைத்தும் கூட்டு முயற்சியின் பலன்கள் என்று அவர் எப்போதும் சொல்வார் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |