தமிழ் புலம்பெயர்ந்தோருக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ள அரசாங்கம்
வெளிநாடுகளில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தோர் நாட்டிற்கு திரும்பி இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அழைப்பு விடுத்துள்ளார்.
“எமது புலம்பெயர்ந்தோர் இலங்கைக்கு வந்து முதலீடு செய்து இலங்கையை அபிவிருத்தி செய்ய ஆவலுடன் காத்திருக்கின்றனர் எனவும், எமது நாட்டை ஒன்றிணைந்து கட்டியெழுப்புமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
'கிளிநொச்சியில் நேற்று (13) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புலம்பெயர்ந்தோருக்கு அழைப்பு
கிளிநொச்சியில் உள்ள பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்தவை. அந்த புலம்பெயர் மக்களை இங்கு வருமாறு அழைக்கிறோம், வேண்டுகோள் விடுக்கிறோம்.
இங்கு காணிப்பிரச்சினைகள் தற்போது தீர்க்கப்பட்டு,நாட்டின் இனப்பிரச்சினையை தீர்க்கப்போகும் சூழலை ரணில் விக்ரமசிங்க உருவாக்கியுள்ளார்.
நாட்டுக்காக நாம் ஒன்றுபட வேண்டிய நேரம் இது. இனம், மதம், சாதி, கட்சிகளை ஒதுக்கி வைக்க வேண்டிய நேரம் இது. நம் நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது. எனவே, இலங்கையுடன் ஒன்றிணைந்து எமது நாட்டை ஒன்றிணைந்து கட்டியெழுப்புமாறு அனைவரையும் அழைக்கின்றோம்”.
12 பில்லியன் டொலர்களை நாட்டிற்கு அனுப்பிய வெளிநாட்டு ஊழியர்களே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்துள்ளதாகவும், சர்வதேச வர்த்தகரான எலோன் மஸ்க்கிற்கு இலங்கையில் தொழில் தொடங்குவதற்கு ஜனாதிபதி ஆரம்ப அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
“நம் நாட்டு மக்கள் வெளிநாட்டிற்குச் சென்று, பணம் சம்பாதித்து, அறிவுடன் அனுபவத்தைக் கொண்டு, இலங்கையில் நல்ல தொழில்முனைவோராக மாற வேண்டும்.
டொலர் பிரச்சினைக்கு தீர்வு
உலகில் நாம் எங்கு வாழ்ந்தாலும், நம் நாட்டில் இருக்கும் சுதந்திரம், அங்கீகாரம், மரியாதை வேறு நாட்டில் இல்லை.
எமது பிரதான பிரச்சினையாக இருந்த டொலர் பிரச்சினைக்கு தீர்வாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் புலம்பெயர் மக்ககளும் நாட்டிற்கு டொலர்களை அனுப்பிவைப்பதற்கு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், எமது புலம்பெயர் தொழிலாளர்கள் 12 பில்லியன் டொலர்களை எமக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், நாட்டை முன்னேற்ற இளம் தலைமுறையினர் முதலீட்டாளர்களாக இருக்க வேண்டும்.நாம் எப்போதும் எதிர்மறையாகவே சிந்திக்கும் சில அரசியல் தலைவர்களின் விடயங்களில் சிக்கிக்கொள்ளாமல் எப்போதும் யதார்த்தமாக சிந்திக்கும் இளம் தலைமுறையாக மாற வேண்டும்.
வடக்கு மற்றும் தெற்கை கடக்க அனுமதி மறுப்பு
1948க்கு முன்னர் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் உரிமையை இழந்தோம். 1956 ஆம் ஆண்டு வடக்கு மற்றும் தெற்கை கடக்க அனுமதிக்கப்படவில்லை, மதில் சுவர்கள் கட்டப்பட்டு சிங்களம் ஆட்சி மொழியாக்கப்பட்டது. யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. முஸ்லிம்கள் தனித்தனியாக ஒதுக்கப்பட்டனர்.அதன் மூலம் வடக்கும் தெற்கும் பிரிக்கப்பட்டன.
2048 ஆண்டுக்கு முன்னர் இலங்கையை வளர்ந்த நாடாக மாற்றி அடுத்த தலைமுறைக்கு பலன் கிடைக்கும் வகையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
