கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாதாள உலக தலைவர்களால் மீண்டும் போதைப்பொருள் கடத்தல்
இலங்கையின் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் வலையமைப்பின் பிரதான தலைவர்களாக கருதப்படும் கனேமுல்ல சஞ்சீவ, குடு சலிந்து, வெலே சுதா மற்றும் பொடி லஸ்ஸி ஆகிய குற்றவாளிகள் சிறைச்சாலையில் இருந்து மீண்டும் போதைப்பொருள் கடத்தலை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த பாதாள உலகக் குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து ஆறு நவீன கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதன் பின்னர் அவர்களின் பாதாள உலகச் செயற்பாடுகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கனேமுல்ல சஞ்சீவ மற்றும் குடு சாலிந்து ஆகிய இரு பாதாள உலகக் குற்றவாளிகள் சுமார் ஒன்றரை வருடங்களாக தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் பாதாள உலகச் செயற்பாடுகளிலோ போதைப்பொருள் கடத்தல்களிலோ ஈடுபடவில்லை என பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.
பலத்த பாதுகாப்பில் இருக்கும் குடு சாலிந்து மற்றும் வெலே சுதா
எனினும் இந்த குற்றவாளிகள் தற்போது தமது கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தி பாதாள உலகக் கும்பல் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகளை நடத்தி வருவதாக தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து வெள்ளிக்கிழமை அதிகாலை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்பில் இருக்கும் குடு சாலிந்து மற்றும் வெலே சுதா ஆகியோரிடம் 04 ஸ்மார்ட் கைத்தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னரும், பூஸ்ஸ சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது கணேமுல்ல சஞ்சீவ மற்றும் பொடி லேசி ஆகியோரிடம் மேலும் இரண்டு ஸ்மார்ட் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த நிலையில், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக தலைவர்களின் கைகளுக்கு இந்த கையடக்கத் தொலைபேசிகள் எவ்வாறு கிடைத்தன என்பது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
