இறுதிநேரத்தில் முறியடிக்கப்பட்ட துப்பாக்கிப் பிரயோக முயற்சி
கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள இரவு விடுதியில் பாதாள உலகக் குழுஉறுப்பினர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்த சம்பவம் தோல்வியில் முடிந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று(20) இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரிடம் ஒப்படைப்பு
குறித்த இடத்தில் கடமையில் இருந்து இரவு விடுதியின் பாதுகாவலர்கள், தாக்குதல்நடத்த வந்தவர்களை தடுத்தமையால் குறித்த அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் ரி 56 துப்பாக்கியுடன் இரவு நேர விடுதியில் இருந்த ஒருவரை இலக்கு வைக்க முயன்றனர்.
எனினும் இரவு விடுதி பாதுகாப்பு அதிகாரிகளை எதிர்கொண்ட அவர்கள், துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனர்.
அவர்கள் கைவிட்டுச்சென்ற மோட்டார் சைக்கிள் பின்னர் இரவு விடுதி ஊழியர்களால் கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



