இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர்
பிரபல பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த மண்டலகல போம்புகலகே சுமித் பிரியந்த என்பவர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இலங்கையில் (Sri Lanka) பதிவு செய்யப்பட்ட குற்றவாளியான பிரியந்த, குருவிட்ட பகுதியில் 5 மில்லியன் ரூபாய் பணம் பறித்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் மிரிஹானவில் கையெறி குண்டுகளை வைத்திருத்தல் உள்ளிட்ட பல கடுமையான குற்றங்களுக்காகத் தேடப்பட்டு வந்ததாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத்துறை
எனினும், சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் போது, அவர் நாட்டை விட்டு தப்பி இந்தியாவுக்கு சென்றமை கண்டறியப்பட்டது.

இந்தநிலையில், விரிவான ஒருங்கிணைப்பு மற்றும் பதில் பொலிஸ் மா அதிபரின் நேரடித் தலையீட்டைத் தொடர்ந்து, 2025, பெப்ரவரி 12, அன்று இரவு பிரியந்த மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுள்ளது.
இதனையடுத்து, குற்றப் புலனாய்வுத்துறை சந்தேக நபரை பொறுப்பேற்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
Super Singer 11: இலங்கை குயிலுக்கு சரண் ராஜா கொடுத்த பரிசு... எமோஷ்னலில் ஒட்டுமொத்த அரங்கம் Manithan
Red Card வாங்கி பிக்பாஸில் இருந்து வெளியேறிய கம்ருதீன், பார்வதி வாங்கிய சம்பளம்... யார் அதிகம் பாருங்க Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam