தகுதியுள்ள மக்களின் வங்கி கணக்கிற்கு வரும் பணம் - நிதி அமைச்சின் உத்தியோகபூர்வ அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளுக்கான பெப்ரவரி மாத கொடுப்பனவுகள் வைப்பிலிடப்படவுள்ளன.
இதற்கான பணம் இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நிதி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அந்த வகையில் குறித்த திட்டத்தில் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்குமான பெப்ரவரி மாதத்திற்குரிய நிதி ஒதுக்கீடுகள் இன்று (12.02.2026) வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன.
பணத்தை பெற முடியும்
எனவே இன்று முதல் பயனாளர்கள் தமது வங்கிக் கணக்கினூடாக கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

அஸ்வெசும என்பது இலங்கையில் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு நலன்புரி நன்மைகள் திட்டம்.
இது முக்கியமாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், வறிய மக்கள், பாதிக்கப்பட்டவர்கள், முதியோர், இயலாமை உள்ளவர்கள் போன்றோருக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்குவதற்காக 2022-23 காலகட்டத்தில் பொருளாதார நெருக்கடியின் போது அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |