பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர் ரஸ்யாவில் கைது
நாட்டின் முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களில் ஒருவராக கருதப்படும் ரொட்டும்பே அமில எனப்படும் அமில சம்பத்என்பவர் ரஸ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரொட்டம்பே அமில, திட்டமிட்ட அடிப்படையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரஷ்யாவின் பாதுகாப்பு பிரிவு, இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு தகவல் வழங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் வழக்கு தொடர்பாக, இன்டர்போல் ஊடாக அவருக்கு எதிராக சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட "ரொட்டும்பே அமில", நாடு கடத்தல் சட்டம் (Extradition Law) கீழ் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
