அனைத்து களப்பணிகளிலிருந்தும் விலக கிராம அலுவலர்கள் தீர்மானம்
நாடு தழுவிய ரீதியில் கிராம அலுவலர்கள் கடந்த புதன்கிழமை (24) தொடக்கம் அனைத்து களப்பணிகளிலிருந்தும் விலக முடிவு செய்துள்ளதாக கிராம அலுவலர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க, இந்த அறிவித்தலை ஊடகங்களுக்கு விடுத்துள்ளார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகள்
தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்வரும் 30ஆம் திகதி சுகவீன விடுமுறை கோரி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக கிராம அலுவலர்கள் கோரிவரும் பயணச் செலவுகளுக்குப் போதுமான எரிபொருள் கொடுப்பனவு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கிராம அலுவலர்களின் சேவைகளுக்குத் தேவையான வசதிகளையும் கொடுப்பனவுகளையும் வழங்குவதில் அதிகாரிகள் அவசர கவனம் செலுத்த வேண்டும் என்றும் கிராம அலுவலர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.