பெருந்தொகை பணத்தை இழக்க நேரிடும்..! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இணைய முதலீட்டு மோசடிகள் குறித்து இலங்கை மக்களுக்கு இலங்கை கணினி அவசரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக ஓய்வூதியங்களை பெறுவோர் குறுகிய காலத்தில் அதிக இலாபம் தருவதாகக்கூறும் இணையவழி முதலீட்டுத் திட்டங்களை நம்பி வாழ்நாள் சேமிப்பைப் பணயம் வைக்க வேண்டாம் என கோரியுள்ளது.
பொலிஸார் தீவிர விசாரணை
மேலும், வயதான பெற்றோர்கள் மற்றும் தனிமையில் வாழும் உறவினர்கள் இத்தகைய நுட்பமான இணைய மோசடி கும்பல்களின் பிரதான இலக்காக மாறுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே அவர்கள் மேற்கொள்ளும் நிதி மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் குறித்து இளைய தலைமுறையினர் விழிப்புடன் இருந்து கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறான சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri