சரத் பொன்சேகாவால் விரட்டப்படவர் தான் சுரேஷ் சலே..! சிதம்பரம் கருணாநிதி பகிரங்கம்
முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, போர்காலங்களில் சுரேஷ் சலேவை தான் விரட்டியதாக குறிப்பிட்டிருந்தார், அப்பாடியாயின் சுரேஷ் சலே நாட்டு பற்றாளர் என்ற கூற்று எவ்வாறு சாத்தியமாகும் என்று எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி கேள்வியெழுப்பியுள்ளார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சுரேஷ் சலேயை ராஜபக்ச குடும்பத்தினருடன் இணைந்து செயல்பட்ட ஒரு துரோகி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர் என்றும், அந்தச் சமூகங்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கம் அவரிடம் இருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மற்ற சந்தேக நபர்களைப் போலவே சுரேஷ் சலேயையும் நடத்த வேண்டும் என்றும், அவருக்கு பூமாலை போட்டு, நாற்காலியில் அமர வைத்து விசாரணை நடத்துவதை விடுத்து, சிஐடி (CID) சட்டப்படி மற்றவர்களுக்கு வழங்கப்பட்ட அதே கடுமையான விசாரணை முறையை அவருக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது அவர் மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருப்பதையும், தனது லேப்டாப் மற்றும் கைபேசியின் கடவுச்சொற்களை வழங்க மறுப்பதையும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான மிக முக்கியமான விசாரணைகளைத் தடுப்பதற்கான ஒரு 'நாடகம்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பான விரிவான விளக்கங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க....