1200 இலட்சம் ரூபாய் இலஞ்சம் : வசமாக சிக்கிய ராஜபக்சவின் மகன் - கலக்கத்தில் மகிந்த - மனைவி
தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ‘ஹரக் கட்டா’ எனப்படும் நதுன் சிந்தக்கவை, விளக்கமறியல் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்காக 1200 இலட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் சட்டத்தரணி ரகித ராஜபக்ச, சரித் அபேசிங்க ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜூலை 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் மிகப்பெரிய ஒரு தொகையினை நாட்டிற்கு வெளியே கொண்டு போய் இருக்கின்றார்கள் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி எம.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்ச நாட்டை உங்களால் நிர்வகிக்க முடியாதுவிட்டால் தன்னிடம் தருமாறு கூறியிருந்தார்.
ஏனெனில் அவர்களுக்கு இந்த இலஞச ஊழல் குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் தற்போதைய அரசாங்கத்திடம் இல்லை என்பது நன்றாகத் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....