இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதி கோர விபத்து - 40 பேர் வைத்தியசாலையில் அனுமதி
மாத்தறை - தங்காலை வீதியில் இன்று காலை (26) இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் சுமார் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸார் விசாரணை
காலியிலிருந்து அம்பாறை நோக்கிச்சென்ற பேருந்தும், தங்காலையிலிருந்து மாத்தறை நோக்கிச்சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளன.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மாத்தறை மற்றும் பத்திகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் இரண்டு பேருந்து சாரதிகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
YOU MAY LIKE THIS VIDEO