நிலைமை மோசமடையலாம்! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
நாட்டில் டெங்கு நோய் தற்போது பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளபடி, இதுவரை நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 49,000 ஆக பதிவாகியுள்ளது.
மரணங்களின் எண்ணிக்கை உயர்வு
இதேநேரம் டெங்கு நோயின் காரணமாக இந்த ஆண்டில் இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது நாட்டின் 14 மாவட்டங்களில் டெங்கு நோய் தீவிரமாகப் பரவி வருவதாக சுகாதாரத் தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
மொத்த நோயாளர்களில் 25,000-இற்கும் மேற்பட்டவர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதன் காரணமாக, தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டை மீறி, நாட்டில் டெங்கு ஒரு தீவிர தொற்றுநோய் நிலைமையாக மாறுவதற்கான கடுமையான அபாயம் காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
மேல் மாகாணத்தில் கொழும்பு, மஹரகம, தெஹிவளை - கல்கிஸ்ஸ உள்ளிட்ட பிரதான மாநகர சபைகளில் கழிவகற்றல் முறையானது முற்றாக முடங்கியுள்ளது.
அவசரகால நிலையை பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை
அத்துடன் கொழும்பு, கண்டி, கராப்பிட்டிய ஆகிய தேசிய வைத்தியசாலைகளில் நோயாளர்கள் இரத்தப் பரிசோதனைகளை வெளியில் செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதோடு, வைத்தியசாலைகளின் கொள்ளளவும் ஊழியர்களின் பற்றாக்குறையும் தாங்கிக்கொள்ள முடியாத எல்லையைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக, வரும் வாரத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த நிலைமை ஒரு கொடிய பெருந்தொற்றாக மாறுவதற்கு முன்னர் நாட்டில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
.