கமாண்டோ சலிந்தவின் கைத்தொலைபேசி தரவுகள் அழிப்பு - விசாரணைகள் ஆரம்பம்
பூசா உயர் பாதுகாப்புச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 'கமாண்டோ சலிந்த' வின் கைத்தொலைபேசியின் தரவுகள் அழிக்கப்பட்ட விடயம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பூசா உயர் பாதுகாப்புச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 'கமாண்டோ சலிந்த' எனும் பாதாள உலகப் புள்ளியிடமிருந்து விசேட அதிரடிப்படையால் கைப்பற்றப்பட்ட பல கைபேசிகளில் இருந்த அனைத்து தரவுகளும் ஆதாரங்களும் வேண்டுமென்றே அழிக்கப்பட்டது குறித்து சிறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சிறைச்சாலையின் ஏதேனும் அதிகாரி
கமாண்டோ சலிந்த, தனது சிறை அறையில் இருந்தபோது கைபேசிகளைப் பயன்படுத்தி பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கிடைத்த உளவுத் தகவலைத் தொடர்ந்து, பொலிஸ் விசேட அதிரடிப்படை பூசா சிறையில் ஒரு அவசர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

அதன்போது விசேட அதிரடிப் படையினர் அவரிடமிருந்து பல கைபேசிகளை மீட்டனர். எனினும் குறித்த கைபேசிகளில் இருந்த தரவுகள் அனைத்தும் தற்போது அழிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
கமாண்டோ சலிந்தவிடம் இருந்து கைபேசி கைப்பற்றப்பட்டதன் பின்னர் சிறைச்சாலையின் ஏதேனும் அதிகாரி குறித்த கைபேசிகளிலிருந்து முக்கியமான ஆதாரங்களையும் தகவல்களையும் உடனடியாக அழித்தாரா என்பதைக் கண்டறிய தற்போதைக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.