கல்முனை வைத்தியசாலையில் சர்ந்சையை ஏற்படுத்தியுள்ள ஆடை விவகாரம்..! யாரும் அறியாத திடுக்கிடும் தகவல்கள்..
கல்முனை ஆதார வைத்தியசாலையில் (Base Hospital Kalmunai) அண்மையில் ஏற்பட்ட உடை தொடர்பான சர்ச்சை தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இந்த நிலையில், அரசு ஊழியர்கள் தங்கள் கடமையின் போது அனுமதிக்கப்பட்ட சீருடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்றும், இது குறித்து 2012-ம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அம்பாறை மாவட்டத்தில் இரண்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகள் (RDHS) இருப்பதன் சட்டப்பூர்வத்தன்மை மற்றும் வைத்தியசாலைப் பெயர்களில் உள்ள மாற்றங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இந்த விவாதம் எந்த ஒரு மதத்திற்கும் அல்லது இனத்திற்கும் எதிரானது அல்ல என்றும், சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவதே அவசியம் எனவும் சமூக மட்டங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அரச ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சீருடைகளை (Uniform) மட்டுமே பணி நேரத்தில் அணிய வேண்டும் என்று இலங்கையின் பொது நிர்வாக மற்றும் சுகாதார அமைச்சின் சுற்றறிக்கைகள் வலியுறுத்துகின்றன. குறிப்பாக 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை (கடித இலக்கம்: 2/176/212), சுகாதாரப் பணி உதவியாளர்கள் மற்றும் கனிஷ்ட தர ஊழியர்கள் முழங்கால் வரை இருக்கும் ஆடைகளை (Cream colour gown) அணிய வேண்டும் என்பதை மிகத் தெளிவாக வரையறுத்துள்ளது.
எந்தவொரு மத அல்லது இன ரீதியான அடையாளங்களையும் அல்லது உடைகளையும் பணி நேரத்தில் அணிய அனுமதி இல்லை என்றும், அரசியலமைப்பு மத சுதந்திரத்தை வழங்கினாலும், அரச கடமைகளில் சீருடை தொடர்பான விதிகளைப் பின்பற்றுவது கட்டாயம் என்றும் இதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த சீருடைகளை அணியத் தவறும் ஊழியர்களுக்கு எதிராக அரச நிறுவனங்களின் தலைவர்கள் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது இந்தச் சுற்றறிக்கையின் கட்டாய விதிமுறையாக உள்ளது.
இந்த விதிமுறைகள் இலங்கையில் உள்ள அனைத்து மாவட்ட வைத்தியசாலைகளுக்கும் பொதுவானவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri