பூசாவில் இருந்த முக்கிய கைதிகள் வெலிசறை கடற்படை தடுப்பு முகாமுக்கு மாற்றம்
பூசாவில் இருந்த பல முக்கிய கைதிகள் அண்மையில் வெலிசறையில் உள்ள கடற்படை தடுப்பு முகாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பூசா சிறைச்சாலை வளாகத்தில் விசேட அதிரடிப்படையினர் அண்மையில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த முக்கிய பாதாள உலகப் புள்ளிகள் பலரின் சிறைக் கூடங்களில் இருந்து ஒரு தொகை கைபேசிகள் கைப்பற்றப்பட்டிருந்தன.
கடற்படையின் தீவிர கண்காணிப்பு
சிறைச்சாலைக்குள் இருந்து கொண்டே அவர்கள் தங்களின் கைபேசி ஊடாக தமது சகாக்களைத் தொடர்பு கொண்டு, தங்களின் போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இந்தச் சூழலில், பூசா உயர் பாதுகாப்புச் சிறையில் இருந்து தபல்வேறு குற்றங்கள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஒன்பது முக்கியக் கைதிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய சமீபத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவ்வாறு பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டவர்களில், 'வெலே சுதா, 'பெக்கோ சமன்' மற்றும் 'தெமட்டகொட சமிந்த' உள்ளிட்ட மிகவும் அபாயகரமான சில கைதிகளும் உள்ளடங்கியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தற்போதைக்கு வெலிசறையில் கடற்படையின் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.