கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு
2025ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் திகதி குறித்து கல்வி அமைச்சு(Sri Lankan Ministry of Education) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களுக்கான வகுப்புகள் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வியாழன்று ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு
இதேவேளை, அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி 02ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை எதிர்வரும் ஜனவரி 24 ஆம் திகதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |