அரச ஊழியர்களுக்கான கட்டுப்பாடுகள்! விமர்சனத்திற்குள்ளாகியுள்ள விடயம்
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப்புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 அரச ஊழியர்கள் கடமை நேரங்களில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து டலஸ் அழகப்பெரும கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
அரச ஊழியர்களுக்கான கட்டுப்பாடுகள்! டலஸின் கடும் விமர்சனம் >>> மேலும்படிக்க
2 வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
தங்கத்தின் விலையில் பதிவாகும் தொடர் வீழ்ச்சி >>> மேலும்படிக்க
3 கல்விப்பொதுத் தராதர உயர்தர பரீட்சை திகதியை பிற்போட்டால் 10ஆயிரம் பாடசாலைகளை ஒரு மாத காலத்துக்கு மூடவேண்டிய நிலைமை ஏற்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
10ஆயிரம் பாடசாலைகள் மூடப்படுவது தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல் >>> மேலும்படிக்க
4 லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் சற்றுமுன் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி சமையல் எரிவாயு விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு >>> மேலும்படிக்க
5 கோதுமை மா உற்பத்தி மற்றும் இறக்குமதியாளர்கள், இந்த வாரம் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கோதுமை மாவின் புதிய விலை தொடர்பில் வெளியான தகவல் >>> மேலும்படிக்க
6 அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு >>> மேலும்படிக்க
7 திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியா வெந்நீர் ஊற்றில் இருந்து ஒரு கிலோ மீட்டர் நகரை அண்மித்தும் ஈஸ்வரபுரம் அமைந்துள்ளது.
சிவமகிமை வாய்ந்த திருகோணமலை! நூற்றுக்கணக்கான லிங்கங்களுக்கு நடக்கும் விசேட பூஜை >>> மேலும்படிக்க
8 இலங்கையிலுள்ள தொழில் வல்லுநர்கள் முறையான முறையில் வரி செலுத்தியிருந்தால், இலங்கையின் பொருளாதாரத்தில் இவ்வாறான நெருக்கடிகள் ஏற்பட்டிருக்காது என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மோசமான நிலைக்கான பிரதான நபர்களை அம்பலப்படுத்திய மத்திய வங்கியின் ஆளுநர் (Video)
>>> மேலும்படிக்க
9 கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.
கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ள சாணக்கியன், சுரேன் ராகவன்! சபாநாயகர் அறிவிப்பு (Live) >>> மேலும்படிக்க
10 கொள்ளையிட்ட நிலையில் கைவிட்டுச் சென்ற சுமார் 5 லட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் தொடர்பில் விசாரணைகளை நடத்தாது, அதனை பயன்படுத்தி வந்த பொலிஸ் உத்தியோகஸ்தரை கொஹூவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை பயன்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர் >>> மேலும்படிக்க