அரச ஊழியர்களுக்கான கட்டுப்பாடுகள்! டலஸின் கடும் விமர்சனம்
அரச ஊழியர்கள் கடமை நேரங்களில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து டலஸ் அழகப்பெரும கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நிலைத்தகவல் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
சுற்றுநிருபம்

அரச ஊழியர்கள் கடமை நேரங்களில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது தொடர்பில், கடந்த 27ஆம் திகதி பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் தாபனக்கோவை விதிகளின் 47ஆம் சரத்து 6,7ஆம் உப சரத்துகளின் அடிப்படையில் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அரச ஊழியர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றம் என குறித்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தகவல் அறியும் சுதந்திரம்

இந்நிலையில் சர்வதேச தகவல் அறியும் சுதந்திர தினத்தில் அரச ஊழியர்களின் தகவல் அறியும் சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள குறித்த சுற்றுநிருபத்தை மீளப் பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மேலும், “அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளை தோற்கடிக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இலங்கையில் அறிமுகப்படுத்திய ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்திலேயே இந்த தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளமை உண்மையில் நகைப்புக்குரிய விடயமாகும்” என்று டலஸ் அலகப்பெரும தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam