அரச சுற்றறிக்கைக்கு அமைய வெளிநாடு சென்றுள்ள அரச ஊழியர்கள்
அரசாங்கம் வெளியிட்ட சுற்றறிக்கைக்கு அமைய சுமார் 300 அரச ஊழியர்கள் இதுவரை வெளிநாடுகளுக்கு தொழில்களுக்காக புறப்பட்டுச் சென்றுள்ளதாக அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் பணிப்புரியும் ஊழியர்கள்
அமைச்சுக்கள், திணைக்களங்களில் பணிப்புரிந்து வந்த அரச ஊழியர்களே இவ்வாறு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
இதனை தவிர அரசுடன் இணைந்த சபைகளில் பணிப்புரியும் ஊழியர்களும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைய வெளிநாடுகளில் தொழில்களுக்காக செல்லும் அரச ஊழியர்களுக்கு சம்பளமின்றி 5 ஆண்டுகளுக்கான விடுமுறை வழங்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க முடியாத நிலைமை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க முடியாத சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் அரச வருவாயில் அதிகமான தொகை அரச ஊழியர்களின் சம்பளத்திற்கே செலவிடப்படுகிறது. மேலும் தேவைக்கு அதிகமாக அரச ஊழியர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால், பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில் அரச ஊழியர்களை வெளிநாடுகளில் தொழில் புரிவதற்கான ஊக்குவிப்புகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan