அமெரிக்காவின் ஈரான் மீதான தாக்குதலுக்கு ஸ்பெயின் பிரதமர் கடும் எதிர்ப்பு ; இராணுவ தளங்களை பயன்படுத்த தடை
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என்றும், இது ஒரு "மாபெரும் தவறு" என்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
போர்த்துக்கல் பிரதமருடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வொஷிங்டனுடனான உறவு என்பது பரஸ்பர மரியாதை மற்றும் சம அந்தஸ்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஈரான் மீதான தாக்குதல்
முன்னதாக, ஸ்பெயினை ஒரு "மோசமான கூட்டணி நாடு" என்று விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்த நாட்டுடனான வர்த்தக உறவுகளைத் துண்டிக்கப் போவதாக எச்சரித்திருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சான்செஸ், ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடுக்க தெற்கு ஸ்பெயினில் உள்ள இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி வழங்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பதற்றமான சூழல் நிலவினாலும், அமெரிக்காவுடன் "நேர்மையான ஒத்துழைப்பை" தொடர விரும்புவதாகவும், அதே சமயம் போருக்குத் தனது நாடு ஒருபோதும் ஆதரளிக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பிரித்தானியாவை வாட்டும் வெப்பம்: 11 பகுதிகளில் வறட்சி அறிவிப்பு: 45 மில்லியன் மக்கள் பாதிப்பு News Lankasri
சூட்கேஸில் இருந்தது மனித சடலம் அல்ல: உயர் ரக செக்ஸ் பொம்மை: அவுஸ்திரேலிய பொலிஸார் விளக்கம் News Lankasri