ரீச்சா இலக்கு வைக்கப்பட்டதன் பின்னணி! தமிழர் பகுதிகளில் புலம்பெயர் தொழிலதிபர்களை குறிவைப்பது யார்..
வடக்கில் புலம்பெயர் முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.
இந்தநிலையில்,'இந்திரன்' மற்றும் கந்தையா பாஸ்கரன் போன்றோர் முன்னெடுத்த நிகழ்வுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் வன்மமான விமர்சனங்கள், தமிழர் பகுதிகளில் முதலீடு செய்வதற்கான பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக இராணுவ ஆய்வாளர் அரூஸ் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்த அவர்,
வட மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) இலங்கையில் மிகக் குறைவாகவே உள்ளது. பொருளாதார ரீதியாக வடக்கும் கிழக்கும் வளர்ச்சி அடைவதைத் தடுப்பதற்கான திரைமறைவுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகக் கருதப்படுகிறது.
புலம்பெயர் முதலீட்டாளர்களுக்குத் தேவையான அரசியல் உறுதித்தன்மை (Political Stability) அங்கு இல்லாததே முதலீடுகள் தவிர்க்கப்படுவதற்குக் காரணம் . ஊழல் மற்றும் தவறான குழுக்களின் அச்சுறுத்தல்களை அரசு கண்டுகொள்ளாமல் விடுவது, முதலீட்டாளர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்துகிறது.
13-வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால், பொலிஸார் மற்றும் காணி அதிகாரங்கள் அடங்கிய உண்மையான அதிகாரப்பகிர்வு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
தமிழகம் மற்றும் தென்னிலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் போல, வடக்கிலும் கிழக்கிலும் ஊழலற்ற அரசியல் கலாச்சாரம் மற்றும் புதிய தலைமைத்துவ மாற்றம் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...