கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ள சாணக்கியன், சுரேன் ராகவன்! சபாநாயகர் அறிவிப்பு (Live)
கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.
இந்த நிலையில் அமர்வு ஆரம்பத்தின் போது சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன குழுக்களுக்கான உறுப்பினர்களின் பெயர் விபரங்களை சபைக்கு அறிவித்துள்ளார்.
கோப் குழு
அதன்படி, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் குழுவுக்கு 27 உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

குறித்த குழுவில் ரவூப் ஹக்கிம், எஸ்.எம்.எம்.முஸாரப், எஸ்.எம் மரிக்கார், முஜிபுர் ரஹ்மான் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
கோபா குழு
அத்துடன் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவான கோபாவுக்கு 27 உறுப்பினர்களும் பெயரிடப்பட்டுள்ளனர்.

மேலும், அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவான கோபாவில் காதர் மஸ்தான், சுரேன் ராகவன், கபிர் ஹாசிம் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam