எரிபொருள் விநியோகம் தொடர்பில் விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
விவசாய மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில் எரிபொருள் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், இன்று (15.3.2026) காலை 6 மணி முதல் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என்று எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
எரிபொருள் இருப்பு
குறிப்பாக, எரிபொருளை சட்டவிரோதமாக சேமித்து வைக்கும் மாஃபியாக்களை கட்டுப்படுத்தி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,நாட்டில் போதுமான எரிபொருள் இருப்புக்களை பராமரிக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் QR அடிப்படையில் எரிபொருள் விநியோகம்! வாகனங்களுக்கான எரிபொருள் அளவு குறித்து வெளியான தகவல்
குறிவைக்கப்பட்ட ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்: அதிரடி தாக்குதல் நடத்திய உக்ரைன் News Lankasri