எரிபொருள் விநியோகம்! தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு
தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கான எரிபொருள், இலங்கை போக்குவரத்துச்சபைக்கு சொந்தமான டிப்போக்கள் ஊடாக விநியோகிக்கப்படும் என வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்குத் தேவையான வாகனங்களுக்கு, உரிய நிறுவனங்களுடன் இணைந்து விசேட வேலைத்திட்டத்தின் கீழ் எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
புதிய எரிபொருள் QR பதிவில் ஏற்பட்டுள்ள சிக்கல்! சற்றுமுன்னர் அரசாங்க தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு
எரிபொருளை முறையாக நிர்வகிக்க அரசாங்கம் தீர்மானம்
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கையிருப்பிலுள்ள எரிபொருளை முறையாக நிர்வகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, இன்று (15) காலை 6 மணி முதல் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என்று எரிசக்தி அமைச்சு அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.
எரிபொருள் விரயத்தை தவிர்க்கவும்
இந்நிலையில், நாட்டின் நிலைமையைக் கருத்திற் கொண்டு அநாவசியமான முறையில் எரிபொருளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கம் என்ற ரீதியில் ஒட்டுமொத்த மக்களிடமும் நாம் விடுக்கும் கோரிக்கை என்னவென்றால், இந்த நேரத்தில் உங்களது குடும்பத்தைப் பற்றி மட்டும் சிந்திக்காமல் நாடு குறித்தும் சிந்திக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் QR அடிப்படையில் எரிபொருள் விநியோகம்! வாகனங்களுக்கான எரிபொருள் அளவு குறித்து வெளியான தகவல்
காணாமல் போகும் கோமதி.. மகன்களிடம் ரூ. 10 லட்சத்தை திரும்ப கேட்ட பாண்டியன்.. அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸில் நடக்கப்போவது இதுதான் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குறிவைக்கப்பட்ட ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்: அதிரடி தாக்குதல் நடத்திய உக்ரைன் News Lankasri