யாழில் குப்பைக்குள் மாயமான பெருந்தொகை தங்கம்
யாழ்ப்பாணத்தில் தவறுதலாக, தமது பெருமளவு தங்கம் குப்பையில் போடப்பட்டதாக,கூறப்படும் சம்பவம் தொடர்பாக, குடும்பம் ஒன்றினால், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கத்தானை பகுதியிலேயே, தமது 42 பவுண் தங்க நகைகள் தவறுதலாக குப்பையில், போடப்பட்டநிலையில், அவற்றை குப்பை அகற்றும் வாகனம் எடுத்துச்சென்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதனை பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலேயே, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாக, முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்க நகைகள்
எனினும் குறித்த தரப்பினரை பொலிஸார் அழைத்து விசாரணை செய்த போதும், அது தொடர்பில் தகவல் எவையும் வெளியாவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னரும் இது போன்ற சம்பவம் ஒன்றில், நகரசபையினர் குப்பைக்குள் இருந்து 18 பவுண் தங்க நகைகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri