கடற்படை அதிகாரியின் மரண விவகாரம்: இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்

Jaffna Sri Lanka Navy Northern Province of Sri Lanka Crime
By Theepan Jun 26, 2024 07:18 AM GMT
Report

யாழ்ப்பாணம் (Jaffna) - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படை வீரரின் மரணம் தொடர்பான வழக்கில் கைதான பத்து இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் ஜுலை 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று (25) அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது ஏற்பட்ட விபத்தில், கடற்படை வீரர் உயிரிழந்தார். 

இதன்போது, 10 இந்திய கடற்றொழிலாளர்களுடன் ஒரு படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யச் சென்ற கடற்படை வீரர் உயிரிழப்பு

இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யச் சென்ற கடற்படை வீரர் உயிரிழப்பு

 சட்ட நடவடிக்கை 

இந்நிலையில், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட10 பேரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடற்படை அதிகாரியின் மரண விவகாரம்: இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல் | Interpretation For Fishermen In Navy Officer Death

மேலும், அவர்களின் படகும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டது.

அதேவேளை, கைதான இந்திய கடற்றொழிலாளர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் நேற்று முற்படுத்தப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் உயிரிழந்த கடற்படை வீரருக்கு இரங்கல்

நெடுந்தீவு கடற்பரப்பில் உயிரிழந்த கடற்படை வீரருக்கு இரங்கல்

 வழக்கு தாக்கல்

இதன்போது, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறியமை மற்றும் ஆபத்தான விதத்தில் படகை செலுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடற்படை அதிகாரியின் மரண விவகாரம்: இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல் | Interpretation For Fishermen In Navy Officer Death

இதற்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் வழக்கை எதிர்வரும் ஜீலை 8ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார். 

மேலும், இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் நுழையும் போது கைது செய்யப்பட்டால் கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் ஊடாக நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவதே வழமை.

இருப்பினும், குறித்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதால் நேரடியாக பொலிஸார் மூலம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு ஆசிரியர் சங்க போராட்டதில் பெரும் பதற்றநிலை: களத்தில் குவி்க்கப்பட்டுள்ள பொலிஸார்

கொழும்பு ஆசிரியர் சங்க போராட்டதில் பெரும் பதற்றநிலை: களத்தில் குவி்க்கப்பட்டுள்ள பொலிஸார்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US