க.பொ.த சாதாரணதர பரீட்சை எழுதும் மாணவனின் விபரீத முடிவு
கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் முதல் நாள் வினாத்தாளை எதிர்கொண்ட மாணவன் வீடு திரும்பிய பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜம்புகஹபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அத்துடன், குறித்த மாணவன் வத்தேகம கல்வி வலயத்தில் உள்ள பாடசாலையில் கல்வி கற்று வந்துள்ளார்.
மாணவனின் விபரீத முடிவு
மாணவன் தனது அறையில் உள்ள மின் இணைப்பிற்கு பயன்படுத்தப்படும் வயரில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவன் உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகரின் அறிவுறுத்தலின்படி மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
