யாழில் பேருந்து காப்பாளரின் நற்செயல்: குவியும் பாராட்டுக்கள்
வெளிநாட்டவர் ஒருவரின் பெரும் தொகை பணமடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்து காப்பாளரின் செயற்பாட்டினை பலரும் பாராட்டி வருகின்றனர்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை சாலையில் காப்பாளராக கடமையாற்றும் பாலமயூரன் என்பவர் கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி சேவைக் கடமையில் நேற்று(07.05.2024)ஈடுபட்டிருந்தார்.
குறித்த பேருந்தில் வெளிநாட்டவர் ஒருவரினால் தவறவிடப்பட்ட கடவுச்சீட்டு, 120,840 இலங்கை ரூபாய் பணம் மற்றும் 300 யூரோ பணத்தினை அவரிடம் ஒப்படைத்துள்ளார்.
பேருந்து காப்பாளரின் செயல்
அண்மை நாட்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலையில் உணவுகள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் செய்திகள் வெளியாகி நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பேருந்து காப்பாளரின் குறித்த செயல் பலராலும் பாராட்டப்படுள்ளது.
அத்துடன் இவர் 2021ம் ஆண்டு மற்றுமொரு பயணி ஒருவரால் தவற விடப்பட்ட இரண்டு இலட்சத்து ஐம்பது ஓராயிரம் ரூபா பணம் மற்றும் எழுபதாயிரம் ரூபாய் பெறுமதியான போன் ஒன்றினையும் சாலை நிர்வாகத்திடம் ஒப்படைத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
