ராஜித தலைமையில் புதிய கூட்டணி: ஒன்றிணையும் அரசியல் கட்சிகள்
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன(Rajitha Senaratne) உருவாாக்கியுள்ள புதிய கூட்டணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தனது தலைமையில் போருக்கு எதிரான சர்வதேச முன்னணி என்ற பெயரில் அமைப்பொன்றை உருவாக்கியுள்ளாா்.
கடந்த திங்கட்கிழமை போருக்கு எதிரான சர்வதேச முன்னணியின் முதலாவது கலந்துரையாடல் கொழும்பில் நடைபெற்றுள்ளது.
விசேட கலந்துரையாடல்
அதில் ஏராளமான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். சுதந்திரக் கட்சியின் சார்பில் துமிந்த திசாநாயக்க எம்.பி., தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மனோ கணேசன் எம்.பி., அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ரிசாத் பதியூதீன் எம்.பி. உட்பட இன்னும் பல அரசியல்வாதிகளும் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.
மேலும் ஏராளமான சிவில் அமைப்புக்களும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
