சம்மாந்துறையில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு: மாடுகளுடன் சிக்கிய கார்
சம்மாந்துறை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, மாடுகளைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் அதிலிருந்த மாடுகளை ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சுற்றிவளைப்பானது நேற்றைய தினம்(10.08.2026) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
திருட்டுச் சம்பவம்
சம்மாந்துறையில் நீண்டகாலமாக மாடுகளைத் திருடி காரில் கடத்திச் சென்று அறுத்து இறைச்சியாக விற்பனை செய்துவந்த கும்பலை கைது செய்வதற்காக சம்மாந்துறை பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இந்தக் குற்றச் செயலுடன் தொடர்புடைய இருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இருப்பினும், தப்பியோடிய சந்தேக நபர்கள் இருவரினதும் அடையாளங்களை பொலிஸார் கண்டறிந்துள்ளதுடன், அவர்களை விரைவாக கைது செய்வதற்கான தீவிரத் தேடுதல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கொழும்பை உலுக்கிய படுகொலை - பிரான்ஸில் இருந்து தீட்டப்பட்ட திட்டம் - பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்கள்