நாமல் ராஜபக்சவுக்கு எதிரான மோசடி வழக்கு: நீதிமன்றத்தின் உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கை, ஜூன் மாதம் வரை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதாகக் கூறி, இந்தியாவின் கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்று நம்பிக்கை மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டி, சட்டமா அதிபரால் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று(21) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதிவாதி கோரிய சில ஆவணங்கள் இன்று திறந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசு தரப்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
முன்விசாரணை ஆலோசனை
சில ஆவணங்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்பட வேண்டும் எனவும், பிரதிவாதிகள் கோரும் மற்ற ஆவணங்கள் எதிர்காலத்தில் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பிரதிவாதிகள் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்ட பின்னர் பிரதிவாதிகளின் நிலைப்பாடு நீதிமன்றத்தில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அதன்படி, முன்விசாரணை ஆலோசனைக்காக இந்த வழக்கு ஜூன் 27, 2025 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
