மேற்குக் கரையில் இனப்பரம்பலை மாற்றுவதற்கு இஸ்ரேல் முயற்சி – ஐநா குற்றச்சாட்டு
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலஸ்தீனர்களின் இனப் பரம்பலை மாற்றுவதற்கு, இஸ்ரேல் நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மைய நடவடிக்கைகள் யூத இஸ்ரேலியர்கள் எளிதாக நிலம் கையகப்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பாலஸ்தீனர்களின் கலாசார மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் அடங்கிய பரந்த நிலப்பரப்புகளின் ஆக்கிரமிப்புக்களை விஸ்தரிகக் முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சிகள் அமல்படுத்தப்பட்டால், பாலஸ்தீனர்களின் நிலங்களை பறிக்கும் வேகத்தை அதிகரிக்கும் மற்றும் அவர்களை கட்டாய இடம்பெயரச் செய்யும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சட்டவிரோதமான புதிய குடியேற்றங்கள் உருவாகும் அபாயம் உள்ளது,” என டர்க் தெரிவித்துள்ளார்.
உலகம் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தின் இன அமைப்பை நிரந்தரமாக மாற்றும் வேகமான முயற்சிகளை காண்கிறது எனவும், இது மக்களை அவர்களுடைய நிலங்களிலிருந்து விலக்கி வெளியேறச் செய்யும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 6 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam