அநுரவை மிரட்ட போகிறதா 2500 பிக்குகளின் வருகை!
கொழும்பில் 2500 பிக்குகள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்ததையடுத்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அச்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, தான் திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதா என்கின்ற சந்தேகம் எழுகின்றது.
நாட்டை முடக்குவோம் என்ற கருத்துக்களை கூறி பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு, நீதிமன்றத்தை பிக்குமார் தவறாக வழிநடத்த முற்படுவதாகவும், நீதிமன்றத்தில் உள்ள நியாயாதிக்கத்தை பிழையாக கேள்விக்கு உட்படுத்துவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டுநடப்புகள் நிகழ்ச்சி..